• Thu. Dec 18th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

மதுரை திருமங்கலம் அருகே திடீரென தீப்பிடித்து எரிந்த கார்…பரபரப்பு

ByKalamegam Viswanathan

Apr 15, 2023

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது காரில் சென்றவர்கள் திடீரென காரை விட்டு இறங்கி ஓடியதால் உயிர் தப்பினர்
மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சின்ன ராஜா இவருடைய மைத்துனர் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மணிமாறன்(25). மணிமாறன் மற்றும் அவருடைய அம்மா அக்கா மற்றும் அக்கா பிள்ளை 4 பேரும் நேற்று இரவு 8 மணி அளவில் மதுரை வசந்த் நகரில் இருந்து திருத்தங்கல் பகுதிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர் திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென காரில் இருந்து புகை வருவதைப் பார்த்த நான்கு பேரும் உடனடியாக காரை விட்டு இறங்கி ஓடினர் .

இதனால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர் சற்று எதிர்பார்க்காமல் நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரிந்து முற்றிலும் சேதம் அடைந்தது தகவல் அறிந்த நிலைய அலுவலர் ஜெயராணி தலைமையிலான திருமங்கலம் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு தீயினை அணைத்தனர் ஆனால் கார் முற்றிலும் சேதம் அடைந்தது மேலும் கப்பலூர் மேம்பாலத்தில் கார் தீ பிடித்து எரிந்ததால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது திருமங்கலம் நெடுஞ்சாலைத்துறை மற்றும் போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை சீர் செய்தனர்
ஓடும் காரில் திடீரென கார் தீ பற்றி எரிந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..