• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மதுரை அருகே விபத்தை தவிர்க்க கடைக்குள் புகுந்த கார்

ByKalamegam Viswanathan

May 29, 2023

மதுரை பசுமலை பகுதியில் சாலையை கடக்க முயன்ற இருசக்கர வாகனம் விபத்தை தவிர்க்க கார் அருகில் பூட்டியிருந்த கடைக்குள் நுழைந்தது.
மதுரை வழியாக திருமங்கலம் செல்லும் TPK சாலையில் தனது குடும்பத்தினருடன் இல்ல நிகழ்ச்சிக்கு ஒன்றில் கலந்து கொண்டு மீண்டும் தனது வீட்டிற்கு காரில் சென்ற நரிமேடு பகுதியைச் சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவரது மகன் அப்துல் ரகுமான் (24) இரண்டு பெண்கள் மற்றும் குழந்தையுடன் மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தார்.
அப்போது திருப்பரங்குன்றம் அருகே முனியாண்டிபுரத்தை சேர்ந்த அர்ஜுனன் (26 வயது)., முத்துகிருஷ்ணன் (27 வயது) ஆகியோர். மதுரையில் இருந்து இருசக்கர வாகனத்தில் திருப்பரங்குன்றம் செல்வதற்காக சாலையில் வந்து கொண்டிருந்தனர். இந்த நிலையில் சாலையின் நடுவே இருந்த தடுப்புச் சுவர் இடையே திடீரென இருசக்கர வாகனத்தை திருப்ப முயன்ற போது மதுரை நோக்கி சென்ற அப்துல் ரகுமான் இருசக்கர வாகனத்தின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை இடது புறம் திருப்பி உள்ளார்.
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் அந்த சாலையில் இருந்த சிற்பங்கள் வடிக்கும் சிற்பக்கலை கூடத்தின் பூட்டி இருந்த கடைக்குள் கார் புகுந்தது. மேலும்., இருசக்கர வாகனத்தில் வந்த அர்ஜுனன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திடீர் நகர் போக்குவரத்து குற்றப்புலன் ஆய்வு பிரிவு போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் காரில் பயணம் செய்த அப்துல் ரகுமான் மற்றும் அவரது குடும்பத்தினர் யாருக்கும் எவ்வித காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். மேலும்., இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த அர்ஜுனனுக்கு தலையில் பலத்த காயமும்., முத்துகிருஷ்ணனுக்கு லேசான காயமும் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.