• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

ராஜபாளையம் அருகே, அரசு பேருந்து மோதியதில், பாஜக நிர்வாகி உயிரிழப்பு

ByKalamegam Viswanathan

Dec 28, 2023

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கோதைநாச்சியார்புரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தையா (68). இவர் பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகியாக இருந்து வந்தார். இவர், ராஜபாளையத்தில் இருந்து வன்னியம்பட்டிக்கு அரசு பேருந்தில் சென்றார். வன்னியம்பட்டி விலக்கு பகுதியில் பேருந்து நின்றபோது ஆனந்தையா பேருந்திலிருந்து இறங்கி சாலையை கடக்க முயன்றார். அப்போது திருப்பூரில் இருந்து செங்கோட்டைக்கு சென்ற அரசு பேருந்து அவர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆனந்தையா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தகவலறிந்த வன்னியம்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்து சென்று, ஆனந்தையா உடலை மீட்டு திருவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்படுத்திய அரசு பேருந்து ஓட்டுநர், செங்கோட்டை பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் (52) மீது போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.