• Tue. Nov 25th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தினமும் காலை நேரங்களில் சாலையில் உலா வரும் காட்டெருமை

நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் தேயிலை தோட்டங்கள் வனப்பகுதிகள் நிறைந்து காணப்படுகின்றன இங்கு சில நாட்களாக. வனவிலங்குகள் அடிக்கடி ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களும் வீட்டின் முன்பும் நின்று பொதுமக்களே அச்சுறுத்தி வருகின்றன கடந்த சில நாட்களாக தொடர்ந்து மின்வாரிய அலுவலகத்தில் இருந்து முக்கிய சாலை வழியாக மஞ்சூர் பஜார் மஞ்சூர் மேல் பஜார் வழியாக பள்ளி மலைவரை ஒற்றைக் காட்டெருமை காலை நேரங்களில் வருகிறது.

காலை நேரங்களில் பள்ளி மாணவ மாணவிகள் தங்களது பள்ளிக்கு செல்வதற்காக நடந்து வருகின்றன வரும் வழியில் காட்டருமையை கண்டவுடன் சாலை ஓரமாக பள்ளி மாணவ மாணவிகள் நின்று விடுகின்றனர் காட்டெருமை சென்றவுடன் தங்களது பள்ளிக்கு செல்கின்றனர்.

அதிக வயதுடைய ஒற்றைக் காட்டறமைக்கு ஒரு கண் தெரியாமலும் மற்றொரு கண் பார்வை குறைபாடோடு மஞ்சூர் பகுதியில் சுற்றி வருவது குறிப்பிடத்தக்கது பொது மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் ஏற்படாதவாறு சாலைகளிலும் தேயிலை தோட்டங்களும் உணவைத் தேடி வருகின்றன பார்வை குறைபாட்டோடு சுற்றித் திரியும் காட்டெருமையோய் தினந்தோறும் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர் வனப்பகுதிக்கு விரட்டினாலும் மீண்டும் மீண்டும் மஞ்சூர் பகுதியிலே சுற்றித் திரியும் காட்டெருமை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்