• Sat. Oct 11th, 2025
WhatsAppImage2025-10-09at2130432
WhatsAppImage2025-10-09at213041
WhatsAppImage2025-10-09at2130401
WhatsAppImage2025-10-09at2130442
WhatsAppImage2025-10-09at2130411
WhatsAppImage2025-10-09at2130444
WhatsAppImage2025-10-09at213044
WhatsAppImage2025-10-09at213040
WhatsAppImage2025-10-09at2130412
WhatsAppImage2025-10-09at2130445
WhatsAppImage2025-10-09at2130443
WhatsAppImage2025-10-09at2130441
WhatsAppImage2025-10-09at213043
WhatsAppImage2025-10-09at2130431
previous arrow
next arrow
Read Now

உலக சாதனை படைத்த 6 வயது சிறுவன்

Byகுமார்

Dec 23, 2023

மதுரை அழகர் கோயில் சாலையில் அமைந்துள்ள வல்லபா வித்தியாலயா பள்ளியில்
சிவகங்கையைச் சேர்ந்த மோகன்ராஜ், மாரீஸ்வரி தம்பதியரின் மகன் தேவசுகன்‌ என்ற 6 வயதும்‌ 11‌மாதங்களும் நிரம்பிய மாணவன் 900kg எடையுள்ள‌ காரை‌(Car) 200‌மீட்டர் தூரம் இழுத்து சோழன் உலக சாதனை படைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சிவகங்கை அரண்மனையின் இளைய மன்னர் மகேஷ்துரை,, தி-கிராண்ட் நட்சத்திர விடுதியின் உரிமையாளரும் விழித்தெழு கல்வி அறக்கட்டளையின் நிறுவனருமான முனைவர் தினேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற
வல்லபா பள்ளியின் தாளாளர் அருண் வல்லப்பன் முன்னிலை வகித்தார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நடுவர்களாக மருத்துவர் ஆர்த்தி, மருத்துவர் பாலாஜி,
தென் மண்டலத் தலைவர் முனைவர் சுந்தர் மற்றும் மருத்துவர் கஜேந்திரன் போன்றோர் உலக சாதனை நிகழ்வை கண்காணித்து உறுதி செய்தனர். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் நீலமேகம் நிமலன் சிறப்புரையாற்றினார். சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்தின் தலைமைச் செயற்குழுவின் பொதுச் செயலாளர் ஆர்த்திகா நிமலன் நிகழ்வை ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார். சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் தேவசுகனுக்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவு கேடயம், பதக்கம் மற்றும் அடையாள அட்டை போன்றவை வழங்கப்பட்டன. சோழன் உலக சாதனை படைத்த சிறுவனை பள்ளியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களும் வாழ்த்தி பாராட்டினார்கள்.