• Mon. Oct 12th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

உலகநாயகன் மூன்று வருடங்களுக்கு செமபிசி

ByA.Tamilselvan

Nov 8, 2022

நடிகர் கமல் அடுத்துவரும் 3 வருடங்கள் நடிக்க இருக்கும் படங்கள் குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில் உலக நயாகன் செம பிசி என்றே சொல்லலாம்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவும் உலகநாயகன் என்றும் ஒட்டுமொத்த ரசிகர்களாலும் கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்.
தமிழ் சினிமாவில் 1970களில் இருந்தே நடிக்க ஆரம்பித்த நடிகர் தான் கமல்ஹாசன். 63வருடங்களுக்கு மேலாக திரையுலகில் இருக்கும் இவர் தற்பொழுது வரை கதாநாயகனாகவே பல படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் இன்று தனது 68வது பிறந்தநாளை கொண்டாடி வருகின்றார். மேலும் இவரின் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் திரைப்படம் ரூ. 450 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.இப்படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் தற்பொழுது இந்தியன் 2 என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.
அவரின் பிறந்தநாளை முன்னிட்டு கமலின் அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்த அறிவிப்புகள் வெளியாகி வருவதை பார்த்து வருகிறோம். அதன்படி தற்போது அவரின் லைன் அப் குறித்து பார்ப்போம்
கமல் 233 – எச்.வினோத் (2023 ரீலிஸ்)
கமல் 234 – மணிரத்னம் (2024 ரீலிஸ்)
கமல் 235 – லோகேஷ் கனகராஜ் (2025 ரீலிஸ்)
ஆகமொத்தத்தில் உலகநாயகன் மூன்று வருடங்களுக்கு செமபிசி