• Sat. Dec 6th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

11 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்த நடிகர் விஷால்..!!

ByA.Tamilselvan

Nov 7, 2022

தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக இருப்பவர் நடிகர் விஷால். இவர் தலைமையில் நேற்று 11 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் நடத்த முடிவு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நடிகர் விஷால் கலந்து கொண்டு 3 மத முறையிலும் வழிபட்டு ஒவ்வொரு ஜோடிகளுக்கும் தாலி எடுத்து கொடுத்து இலவச திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் 51 பொருட்கள் அடங்கிய சீர்வரிசையை நடிகர் விஷால் மணமக்களுக்கு வழங்கினார். அவர்களுக்கு 51 பொருள்களுடன் சீர்வரிசையையும் விஷால் வழங்கினார். அதன் பிறகு மேடையில் பேசிய விஷால், ” எனக்கு குடும்பம் பெரிதாகிவிட்டது. 11 தங்கைகள் கிடைத்துள்ளனர். என் தங்கைகளை கண்கலங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். என் வேட்டியை மடித்து கட்ட வெச்சிடாதீங்க மாப்பிள்ளைகளா. சும்மா இருக்க மாட்டேன் என்ன பேசினார்.
இந்த 11 ஜோடிகளின் குழந்தைகளுக்கு எதிர்காலத்தில் படிப்புக்கு உதவி செய்வேன். இந்த இலவச திருமணங்கள் போன்று மற்ற மாவட்டங்களிலும் எனது இயக்கம் சார்பில் சிறப்பாக நடைபெற ஏற்பாடு செய்வேன். நானும் நிச்சயம் காதல் திருமணம்தான் செய்வேன்.
நடிகர் சங்க கட்டிடம் பணிகள் மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிவடைய உள்ளன. நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 500 கலைஞர்கள் உறுப்பினராக உள்ளனர். அவர்களின் எதிர்காலத்திற்காக நான் பாடுபட்டு வருகிறேன். நான் யாரிடமும் பிச்சை கேட்கும் பழக்கம் கிடையாது. ஆனால் ஒரு மாணவியின் படிப்புக்காக கல்லூரியில் பிச்சை கேட்டு அந்த மாணவியை உயர்தர கல்வி பெற வைத்து உள்ளேன். தற்போது அந்த மாணவி மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார். அவர் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். அது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. ஏழை குழந்தைகளை படிக்க வைப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை தருகிறது. இவ்வாறு நடிகர் விஷால் கூறினார்.