• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி

கிறிஸ்து ஜோதி மெட்ரிக் எச்.எஸ்.எஸ்., (சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்.,) பள்ளி வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான குத்துச்சண்டை போட்டி நேற்று நடந்தது. 14,17 மற்றும் 19 வயதுக்குட்பட்டோர் என 3 பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தது.12 அரசு பள்ளி மற்றும் சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ்., மாணவ மாணவிகள் போட்டியில் கலந்து கொண்டனர். மாலையில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மாவட்ட போட்டியில் வெற்றி பெறுபவர்கள், வரும் ஜனவரிக்குள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள். தேசிய அளவிலான ஸ்கூல் கேம்ஸ் ஃபெடரேஷன் ஆஃப் இந்தியா போட்டிகளுக்கு மாவட்டம் மற்றும் மாநில அளவில் தனித் தேர்வுப் போட்டி நடத்தப்படும். ஒளிரும் ஈரோடு பவுண்டேஷன் தலைவர் எம் சின்னசாமி போட்டிகளை துவக்கி வைத்தார்.சென்னை லூர்து மாதா ஃபோரான் தேவாலய அருட்தந்தை ஜோபி தெக்கினேடத், டிஇஓ ஆர்.ராமசாமி, மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் எஸ்.முருகன் ஆகியோர் சி.ஜே.எம்.எச்.எஸ்.எஸ். ஆகியோர் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந்தனர்.