• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மல்லிகைப்பூ கிலோ ரூ.787-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.787-க்கு ஏலம் போனது.
சத்தியமங்கலத்தில் உள்ள கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணிக்கு தொடங்கி மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று பூக்கள் ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான விவசாயிகள் பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.787-க்கும், முல்லை ரூ.560-க்கும், காக்கடா ரூ.325-க்கும், செண்டுமல்லி ரூ.60-க்கும், பட்டுப்பூ ரூ.88-க்கும், ஜாதிமல்லி ரூ.500-க்கும், கனகாம்பரம் ரூ.760-க்கும், சம்பங்கி ரூ.30-க்கும், அரளி ரூ.150-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.100-க்கும் ஏலம் போனது.