சிவகார்த்திகேயன் நடிப்பில் விறுவிருப்பாக படபிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் ‘மாவீரன்’ திரைப்பட பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.
மண்டேலா’ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்தார் இயக்குனர் மடோன் அஸ்வின். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் மடோன் அஸ்வின் புதிய படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் 22-வது படமாக உருவாகிறது. படத்திற்கு ‘மாவீரன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. நடிகை அதிதி ஷங்கர் இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். பிரின்ஸ் படத்தைத் தயாரிக்கும் சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தான் இந்தப் படத்தையும் தயாரிக்கின்றனர். இந்தப் படத்தில் இயக்குனர் மிஷ்கின் இந்தப் படத்தில் வில்லனாக நடிக்கிறார். படத்திற்கு பரத் சங்கர் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், படத்தின் சில காட்சிகளை மாற்றச் சொன்னதால் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் அஸ்வினுக்கும் இடையே கருத்து வேறுபாடு என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், மாவீரன் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. படப்பிடிப்பு 40 நாட்கள் நடைபெற்ற நிலையில் மீதம் உள்ள 30 நாள் படப்பிடிப்பு தற்காலிக நிறுத்தப்பட்டது.
சிவகார்த்திகேயன் திரைப்படம் தற்காலிகமாக நிறுத்தம்..!






; ?>)
; ?>)
; ?>)
