• Wed. Aug 5th, 2026
WhatsAppImage2026-07-30at222010
previous arrow
next arrow
Read Now

செண்டை மேளம் அடித்த மம்தா பானர்ஜி

ByA.Tamilselvan

Nov 3, 2022

இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா கலந்து கொண்ட மம்தா பானர்ஜி சென்டைமேளம் அடித்து உற்சாகம்.
சென்னை கோடம்பாக்கத்தில் மணிப்பூர் மற்றும் மேற்கு வங்காள கவர்னர் இல.கணேசன் சகோதரர் சதாபிஷேக விழா இன்று நடந்தது. விழாவில் பங்கேற்க வந்த மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மண்டபத்தின் நுழைவு வாயில் பகுதியில் கேரள பாரம்பரிய இசையான செண்டை மேளம் அடித்து அவரை வரவேற்றனர். பாதுகாப்பு வீரர்களுடன் அங்கு வந்து இறங்கிய மம்தா பானர்ஜி செண்டை மேளம் அடிக்கப்படுவதையும், அதன் ‘கணீர்’ ஓசையையும் சிறிது நேரம் ரசித்தவாறு வந்தார். இசை கலைஞர்களை அவர் புன்னகையோடு பார்த்தார். அப்போது உற்சாக மிகுதியில் இசை கலைஞர் ஒருவரிடம் இருந்த குச்சியை வாங்கி மம்தா பானர்ஜியும் செண்டை மேளத்தை அடித்தார். அவர் செண்டை மேளம் அடித்த காட்சி பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.