பாரத்ஜோடாயாத்ரா நடைபயணத்தில் தெலுங்கானாவில் உள்ள ராகுல்காந்தி தன்னை சாட்டையால் அடித்துக்கொள்ளும் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.
கன்னியாகுமரியில் தொடங்கிய தனது நடைபயணத்தில் தற்போது ராகுல்காந்தி தெலுங்கானவில் கடந்த 8 நாட்களாக இருக்கிறார். நேற்று ஹதரபாத் சென்ற அவர் இன்று சங்காரெட்டியில் தனது நடைபயணத்தை தொடர்கிறார். அங்கு அவருக்கு புடகாஜலங்கா சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.அப்போது அவர்களிடம் இருந்து சாட்டையை வாங்கிய ராகுல்காந்தி தன்னைத்தானே சாட்டையால் அடித்துக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வலை தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
சாட்டையால் தன்னை அடித்துக்கொள்ளும் ராகுல் காந்தி- வைரல் வீடியோ
