• Fri. Aug 28th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ட்விட்டர் தொழிட் நுட்ப அதிகாரியான தமிழர்

ByA.Tamilselvan

Nov 2, 2022

டுவிட்டரில் எலான் மஸ்குக்கு சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார்.
ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா நிறுவனங்களில் தலைமை நிர்வாக அதிகாரியும் உலகின் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் பிரபல சமூக வலைத்தளமான டுவிட்டரை வாங்கியுள்ளார். டுவிட்டர் நிறுவனம் தனது கைக்கு வந்த உடனே அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பராக் அக்ரவால், தலைமை நிதி அதிகாரி நெட் செகல் உள்ளிட்ட 4 முக்கிய நிர்வாகிகளை அதிரடியாக பணிநீக்கம் செய்தார் எலான் மஸ்க்.
டுவிட்டரில் எலான் மஸ்குக்கு இந்திய தொழில்நுட்ப வல்லுநர் ஒருவர் உதவி புரிந்து வருகிறார். அவர் சென்னையில் பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன். எலான் மஸ்குக்கு தான் உதவி வருவதை ஸ்ரீராம் கிருஷ்ணன் டுவிட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “டுவிட்டர் நிறுவனத்தில் தற்காலிகமாக எலான் மஸ்குக்கு உதவி வருகிறேன். என்னோடு இணைந்து வேறு சிலரும் இந்த பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது மிகவும் முக்கியமான நிறுவனம். உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதும் கூட மஸ்க், அதை சாத்தியம் செய்வார் என்றும் நம்புகிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.