• Sat. Apr 11th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில்
யு.பி.ஐ. பண பரிவர்த்தனை அதிகரிப்பு..!

இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
யு பி ஐ என்று அழைக்கப்படும் ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம், ஸ்மார்ட்போன் பயனாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாகும். 2016ம் ஆண்டு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. கூகுள் பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் யுபிஐ மூலம் 678 கோடி பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது அது 7.7 சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும், 6 ஆண்டுகளுக்கு முன்பு டிஜிட்டல் பரிவர்த்தனை வசதி தொடங்கப்பட்டதிலிருந்து அதிகபட்சமாக கடந்த அக்டோபர் மாதத்தில், ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளன. மேலும், அக்டோபரில், ஐ.எம்.பி.எஸ்., சேவை வாயிலாக, 48.25 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளன. இதன் மதிப்பு 4.66 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.