• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

லைட்கலர் உடையில் சண்டைகாட்சியில் அசத்தும் அஜித்

ByA.Tamilselvan

Nov 1, 2022

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் ‘துணிவு’. மஞ்சுவாரியர் நாயகியாக நடிக்கும் படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். அஜித் இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து படங்கள் நடித்து நிறைய வெற்றிப்படங்கள் கொடுத்து வந்தார். இப்போது இயக்குனர் வினோத்துடன் கூட்டணி அமைத்து இரண்டு படங்களை முடித்து 3வது படம் நடிக்கிறார்.இப்பட ஃபஸ்ட் லுக் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் சாதாரணமாக ரிலீஸ் ஆனது. துணிவு என்ற படத்தின் பெயரை ரசிகர்கள் பெரிய அளவில் டிரண்ட் செய்து வழக்கம் போல் கொண்டாடினார்கள்.இப்போது பட ரிலீஸும் அடுத்த வருடம் என அறிவிப்பு வர ரசிகர்கள் அந்த நாளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.அண்மையில் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் மஞ்சு வாரியர் டப்பிங்கை முடித்திருப்பதாக புகைப்படத்துடன் அறிவித்தார். இப்போது என்னவென்றால் அஜித் படப்பிடிப்பு தளத்தில் போனி கபூருடன் பேசிக் கொண்டிருக்கும் போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது.அதில் அஜித் லைட் கலர் உடையில் சண்டை காட்சியில் நடித்திருக்கிறார்.
விஜயின் வாரிசு படமும் ,அஜித்தின் துணிவு படமும் ஒரேநாளில் வெளியாகும் என தெரிகிறது .இதனால் இப்போதே ரசிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது.