• Sat. Jan 17th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

பாகிஸ்தானை விடவும் பாதுகாப்பற்ற நாடானது இந்தியா!

ByA.Tamilselvan

Oct 30, 2022

உலக பட்டினி தரவரிசை பட்டியலில் நமது அண்டை நாடான பாகிஸ்தானை விடவும் இந்தியா பின்தங்கியுள்ளதாக அயர்லாந்தைசேர்ந்த அமைப்பு தகவல்.
உலகில் பட்டினி நிலவும் நாடுக ளின் 2022-ஆம் ஆண்டிற்கான தரவரி சையில் இந்தியா மோசமான இடத்தையே பிடித்தது. அயர்லாந்தைச் சேர்ந்த ‘கன்சர்ன் வேர்ல்ட்வைட்’ (Concern World wide) அமைப்பும், ஜெர்மனியைச் சேர்ந்த ‘வெல்ட் ஹங்கர் ஹில்ப்’ (Welt Hunger Hilfe) அமைப்பும் இணைந்து, இந்த பட்டினி நாடுகளின் தர வரிசையை (Global Hunger Index -GHI) கடந்த வாரம் வெளி யிட்டிருந்தன. இதில், ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 121 நாடுகளில் இந்தியா மிகமோசமாக 107-ஆவது இடத் தையே பிடித்தது. இந்த தரவரிசை யில் பாகிஸ்தான் 99-ஆவது இடத்தைப் பிடித்து, இந்தியாவைக் காட்டிலும் மேம்பட்ட நிலையை வெளிப்படுத்தியுள்ளது.