• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

பசும்பொன் தேவர் நினைவிடத்தில் கே.டி.ராஜேந்திபாலாஜி மரியாதை

ByA.Tamilselvan

Oct 28, 2022

தேவர்குருபூஜை விழாவை முன்னிட்டு பசும்பொன்னில் தேவர் நினைவிடத்தில் முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திபாலாஜி மரியாதை செலுத்தினார்.


ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அடுத்த பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா அக்.30-ல் நடைபெறும். இந்த நாளில் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் திரண்டு பசும்பொன் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கம்.
இந்நிலையில் விருதுநகர் மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திபாலாஜி இன்று காலை பசும்பொன் கிராமத்திற்கு சென்று முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இந்நிகழ்ச்சியில் மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி செயலாளர் முன்னாள் எம்எல்ஏ.ராஜவர்மன், விருதுநகர் நகர செயலாளர் நெய்னார், விருதுநகர் கிழக்கு ஒன்றியசெயலாளர் தர்மலிங்கம், விருதுநகர்மேற்கு ஒன்றிய செயலாளர் கண்ணன், விருதுநகர் மாவட்ட கழக தொழில்நுட்பத்துறை நகர செயலாளர் பாசறை சரவணன்,விருதுநகர் மேற்கு ஒன்றிய இளைஞர் பாசறை செயலாளர் குரு கணேஷ்,எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் சுப்புரமணி,விருதுநகர் மேற்கு ஒன்றிய அம்மாபேரவே செயலாளர் மாரிக்கனி உள்ளிட்ட அதிமுக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்