• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

கோவை கார் வெடிப்பு சம்பவம்: முதல்-அமைச்சர் ஆலோசனை

ByA.Tamilselvan

Oct 26, 2022

கோவை கார் வெடிப்பு சம்பவம் குறித்து தலைமைச்செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
கோவையில் தீபாவளிக்கு முந்தைய நாளான கடந்த 23-ந்தேதி அதிகாலையில் காரில் எடுத்துச் செல்லப்பட்ட சிலிண்டர் மற்றும் வெடிபொருட்கள் வெடித்து சிதறியதில் முபின் என்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து டி.ஜி.பி. சைலேந்திரபாபு உடனடியாக நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் இறையன்பு, டி.ஜி.பி. சைலேந்திரபாபு, உள்துறை கூடுதல் தலைமை செயலாளர் பணீந்திர ரெட்டி, உளவு துறை கூடுதல் டி.ஜி.பி. டேவிட்சன், தேவாசீர்வாதம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. இது போன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுக்கும் வகையிலும் விரிவாக விவாதிக்கப்பட்டது.