• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அனைவருக்கும் அரசியல்டுடே  இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

 

தமிழக மக்களுக்கும் வாசகர்களுக்கும்,விளம்பரதாரர்களுக்கு எங்களது 

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் 

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா என்ற பெரும் தொற்று காரணமாக நாடு  முழுவதும் திருவிழாக்கள் பண்டிகைகள் சிறப்பாக கொண்டாட முடியாமல் போனது தொழில்கள் முடங்கின வருவாய் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர். சிறு குறு தொழில்கள் முடங்கியது. அன்றாடக் கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து மிகவும் சிரமப்பட்டனர்,பலர் வேலை இழந்தனர்.இந்த சூழ்நிலையில் கடந்த  2 ஆண்டுகளாக தீபாவளி கொண்டாட்டம் சிறப்பாக இல்லாமல் இருந்தது. இந்நிலையில் கொரோனாதொற்றின் வீரியம் குறைந்தது. அடுத்து இந்த ஆண்டு  அனைத்து பண்டிகைகளும், திருவிழாக்களும் வெகு உற்சாகமாக  கொண்டாடப்படுகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கொண்டாடப்படும் தீபாவளி  பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாட தயாராகி வருகின்றனர். அனைவரும் புத்தாடை வாங்கியும், இனிப்புகளை வாங்கியும் வீடுகளில் தீபங்களை ஏற்றி கொண்டாட தயாராகி வருகின்றனர். இந்த தீபாவளியை அனைத்து மக்களும் உற்சாகமாக கொண்டாட வேண்டும் என்பதுதான் அனைவரின் ஆசையாக உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை வரை அனைவரும்  கொண்டாட்டத்தின்  முகமாக உற்சாகமாக பட்டாசு வெடிப்பார்கள் அந்தப் பட்டாசை மிகவும் பாதுகாப்பான முறையில் வெடிக்க வேண்டும், சிறுவர்கள் பட்டாசு வெடிக்கும் போது பெரியவர்கள்  துணை நிற்க வேண்டும். ஆபத்தை விளைவிக்கும் பட்டாசு வெடிப்பதை தவிர்க்க  வேண்டும். பாதுகாப்பான பட்டாசை வெடித்து மகிழ்ச்சியுடன் இந்த ஆண்டு  தீபாவளியை கொண்டாட வேண்டும் என்பதே எங்களின் வேண்டுகோளாக உள்ளது

மீண்டும் ஒருமுறை அனைவருக்கும் Thazhali News & Media அரசியல் டுடே சார்பாக இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!