• Fri. Oct 16th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

சிவகாசியில் பட்டாசு விற்பனை அமோகம்

ByA.Tamilselvan

Oct 23, 2022

தீபாவளி என்றாலே பட்டாசு என்ற நிலையில் சிவகாசியில் பட்டாசு விற்பனை 2 ஆண்டுகளுக்கு பிறகு அமோகமாக விற்பனையாகி உள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக சிவகாசியில் பட்டாசு விற்பனை களை கட்டியது.ஆன்லைன் உள்பட பல்வேறு ஆர்டர்களுக்கு பட்டாசுகள் அனுப்பி வைக்கப்பட்டன. கடந்த சில நாட்களாக விற்பனை சூடு பிடித்ததால் பல கோடி ரூபாய் அளவுக்கு விற்பனை நடைபெற்றது. அனைத்து பட்டாசுகளும் விற்பனையாகி விட்டதால் 50 சதவீத பட்டாசு கடைகள் மூடப்பட்டுள்ளது. இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் பட்டாசு வாங்க சிவகாசி வரும் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து விடக்கூடாது என்பதற்காக சில கடைகள் மட்டும் திறக்கப்பட்டு விற்பனை நடைபெற்றது.