• Thu. Oct 15th, 2026
WhatsAppImage2026-10-09at2207422
previous arrow
next arrow
Read Now

தீபாவளிக்கு திரையரங்குகளில் சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி

ByA.Tamilselvan

Oct 20, 2022

சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் நாளை வெளியாக உள்ளது. தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை வருகிற 24-ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், அதற்கு இப்பொழுதே மக்கள் தயாராகி வருகின்றனர். அதேபோல் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அதற்கு ஏதுவாக ஏற்கனவே ஒளிப்பரப்பக்கூடிய காட்சிகளில் சில மாற்றங்கள் செய்து கூடுதலாக சில சிறப்பு காட்சிகளை ஒளிப்பரப்ப திரையரங்க உரிமையாளர்கள் திட்டமிடுவர். இந்நிலையில் தீபாவளி பண்டியை ஒட்டி வெளியாகும் படங்களின் சிறப்பு காட்சிகளை ஒளிபரப்ப தமிழக அரசு அனுமதியளித்துள்ளது. நாளை முதல் 24-ம் தேதி வரை சிறப்பு காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறப்பு காட்சிகள் நேரம் குறித்து உரிய அரசு அதிகாரிகளிடம் தெரியப்படுத்த தியேட்டர் உரிமையாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயனின் ப்ரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படங்கள் 21-ம் (நாளை) தேதி திரையரங்குகளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.