• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஆண்டிபட்டியில் அதிமுக 51வது ஆண்டு துவக்க விழா கொண்டாட்டம்.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அகில இந்திய அண்ணா திமுகவின் 51 வது ஆண்டு துவக்க விழா விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு ஆண்டிபட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் லோகி ராஜன் தலைமையில் ,கிழக்கு ஒன்றிய செயலாளர் வரதராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் அமரேசன் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் ஊர்வலமாக வந்து வைகை சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனை தொடர்ந்து பட்டாசுகளை வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வழங்கி கொண்டாடினார்கள் .

தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று எம்ஜிஆர் படிப்பகம் ,நாடார் தெருவில் உள்ள எம்ஜிஆர் நினைவகம் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலை ஆகியவற்றிற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி ,பேருந்தில் பயணித்தவர்கள் உட்பட பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும், பல இடங்களில் அதிமுக கட்சி கொடி ஏற்றியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டனர். நிகழ்ச்சியில் பேரூர் கழகச் செயலாளர் அருண்மதி கணேசன் மற்றும் ஒன்றிய, நகர, கிளைக் கழக நிர்வாகிகள்,உள்ளாட்சி பிரதிநிதிகள் ,கலந்து கொண்டனர்.