• Thu. Mar 12th, 2026
WhatsAppImage2026-03-05at0942011
previous arrow
next arrow
Read Now

வெள்ளைப்புறா பறக்கவிட்ட ஓபிஎஸ் .. இபிஎஸ்க்கு சமாதான தூதா?

ByA.Tamilselvan

Oct 17, 2022

அதிமுகவின் 51ம் ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு ஓபிஎஸ் பறக்கவிட்ட வெள்ளைபுறா இபிஎஸ்க்கு தூதாஅல்லது புதிய கட்சி சின்னமா ? என பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அதிமுக பொன்விழா ஆண்டை நிறைவு செய்து 51-வது ஆண்டில் இன்று அடியெடுத்து வைக்கிறது… இதையடுத்து, சென்னையில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைக்கு எடப்பாடி பழனிசாமியும், தி.நகரில் உள்ள எம்ஜிஆர் நினைவு இல்லத்தில் ஓபிஎஸ்ஸும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதே போல எம்.ஜி.ஆர்.ஜெயலலிதா நினைவு இடங்களில் மரியாதை செலுத்திய ஓபிஎஸ் வெள்ளைபுறாவை பறக்க விட்டார்.இது இபிஎஸ்க்கான சமாதான தூது என்று ஒரு தரப்பும், ஜெ,ஜானகி என அதிமுக இரு அணிகளாக பிரிந்து இருந்த நேரத்தில் ஜெ.அணிக்கு சேவல் சின்னமும், ஜா.அணிக்கு இரட்டை புறா சின்னமும் கொடுக்கப்பட்டது.அதேபோல் ஓபிஎஸ் புதிய கட்சியை தொடங்கி புதிய சின்னத்தை கைப்பற்றும் மறைமுக மெசேஜ் இது என்று மற்றொரு தரப்பும் கூறுகின்றனர்.