• Mon. Jan 19th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

படகு கவிழ்ந்து விபத்து- குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

ByA.Tamilselvan

Oct 16, 2022

பீகாரில் கங்கை மற்றும் அதன் கிளை நதிகளில் ஒன்றான கங்கை சங்கமிக்கும் இடத்தில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 7 பேர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
படகில் விவசாயிகள் 10 பேரை ஏற்றிக் கொண்டு சென்றபோது, திடீரென படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், மூன்று பேர் நீந்திச் சென்று உயிர் தப்பிய நிலையில் மற்றவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டனர். இரவு முழுவதும் தொடரந்து நடத்திய தேடுதலில் குழந்தைகள் உள்பட 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இதனிடையே, இச்சம்பவம் குறித்து இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் நிதிஷ்குமார், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத் தொகை வழங்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளார்.