• Sat. Jul 18th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

இன்று அதிகாலை சத்தீஸ்கரில் லேசான நிலநடுக்கம்

ByA.Tamilselvan

Oct 14, 2022

சத்தீஸ்கரின் அம்பிகாபூரில் 4.8 ரிக்டர் அளவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் அம்பிகாபூருக்கு மேற்கே 65 கிமீ தொலைவில், பூமிக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் அதிகாலை 5.28 மணியளவில் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் நில அதிர்வை உணர்ந்து பீதியில் வீட்டைவிட்டு வெளியேறினர். இருப்பினும் லேசான நில அதிர்வு என்பதால் யாருக்கும் பாதிப்போ அல்லது பொருட்சேதமோ இல்லை என்று தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.