• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

அழகு குறிப்புகள்

Byவிஷா

Oct 12, 2022

சரும அழகை பாதுகாக்கும் கொய்யா இலைகள்:

கொய்யா இலைகளுக்கு இயற்கையாகவே சருமத்திற்கு நிறத்தை கொடுக்கும் தன்மை இருக்கிறது. கொய்யா இலையை நன்கு அரைத்து சிறிது தயிர் சேர்த்து கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி வர சருமம் புது பொலிவு உண்டாகும்.
கொய்யா இலைகளை அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் கலந்து பூசி 30 நிமிடங்கள் பிறகு குளிர்ந்த நீரில் கழுவவேண்டும். இது முகத்தில் உள்ள துவாரங்களில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சிட வைக்கும்.
கொய்யா இலைகளை அரைத்து முகத்தில் தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்து வர முகப்பரு நீங்கும். கொய்யா இலைகளை நன்கு அரைத்து அதனுடன் முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து முகத்தில் பூசி வர முக சுருக்கங்கள் நீங்கி முகதிற்கு நல்ல பளபளப்பை தரும்.
பொடுகு பிரச்சினைக்கு கொய்ய இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து பிறகு சூடு ஆறியதும் தலைக்கு தேய்த்து குளித்து வர பொடுகு நீங்கி முடி உதிர்வதும் சரியாகும். முகத்தில் எண்ணெய் வழிவது போல் இருந்தால் கொய்யா இலைகளை பேஸ்ட் போல் அரைத்து எலுமிச்சை சாறு கலந்து தேய்த்து வர முகத்தில் உள்ள எண்ணெய் பசை நீங்கி முகம் பளபளப்பாகும்.