• Wed. Sep 2nd, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தி.மு.க. தலைவராக மு.க.ஸ்டாலின் 2வது முறையாக தேர்வாகிறார்

ByA.Tamilselvan

Oct 9, 2022

இன்று நடைபெறும் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 2வது முறையாக மு.க.ஸ்டாலின் தலைவராக போட்டியின்றி தேர்வாகிறார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் இன்று காலை 10 மணிக்கு திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்குகிறது. மு.க.ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில்மொத்தம் 4 ஆயிரம் பேர் இதில் பங்கேற்கின்றனர். திமுக தலைவர் பதவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பொது செயலாளர் பதவிக்கு அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. ஆகியோர் மீண்டும் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். அவர்களை எதிர்த்து வேறு யாரும் மனுத்தாக்கல் செய்யவில்லை. எனவே இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் 3 பேரும் ஒருமனதாக இந்த பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதையடுத்து திமுக தலைவராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டாவது முறையாக போட்டியின்றி தேர்வாகிறார். தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சுப்புலட்சுமி ஜெகதீசன் விலகி உள்ள நிலையில் அந்த இடத்துக்கு புதிய நிர்வாகி இன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நியமிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.