• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தாமரைக் குளம் பேரூராட்சியில் துப்புரப் பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்

துப்புரவு பணி செய்ய மறுத்த ஊழியர்களை கண்டித்து தாமரைகுளம் பேரூராட்சியில் துப்புரவுபணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்.
தாமரைக் குளம் பேரூராட்சியில் நிரந்தர துப்புரப் பணியாளர்கள் தன்னுடன் பணி புரியும் நிரந்தர துப்புறப் பணியாளர்களான கோட்டை கருப்பசாமி, வெற்றிச்செல்வன், பிச்சைமுத்து, ஜானகி ஆகிய இவர்கள் அனைவரும் துப்புரவு பணி செய்ய மறுத்த காரணத்துக்காக சக பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இவர்கள் நான்கு பேரும் துப்புரப் பணி நியமனம் பெற்ற நாளிலிருந்து துப்புரவு பணி செய்ய மறுத்து வருகிறார்கள் இதன் காரணமாக சென்னை பேரூராட்சிகளின் ஆணையாளர் 2008 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை துப்புரவு பணியாளர்கள் துப்புரவு பணி தான் செய்ய வேண்டும் அதற்கு மாறாக மாற்றுப் பணியில் ஈடுபடுத்தக் கூடாது அப்படி ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட செயல் அலுவலர் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல உத்தரவுகளை பிறப்பித்தாலும் தாமரைக் குளம் பேரூராட்சி செயல் அலுவலர் ஆளவந்தான் பேரூராட்சி ஆணையாளர் உத்தரவை மதிக்காமல் சாதிய பாகுபாடு உடன் இன்று வரை தன்னிச்சையாக செயல்பட்டு இந்த நான்கு பணியாளர்களை மாற்றுப் பணியில் ஈடுபடுத்தி அங்குள்ள சக பணியாளர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தி சாதிய பாகுபாடோடு நடந்து கொண்டு வருகிறார்.
இவர் மீது தேனி மண்டல பேரூராட்சி உதவி இயக்குனர் பொறுப்பு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பணி செய்ய மறுத்து வரும் நான்கு துப்புரப் பணியாளர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இந்திய குடியரசு தொழிலாளர் தொழிற்சங்க மாநில துணைச் செயலாளர் நா. ஜெகநாதன் வலியுறுத்தியுள்ளார்.