• Fri. Apr 26th, 2024

பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட வேண்டும் கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் .

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியம், கோவில்பட்டி ஊராட்சிக்குட்பட்ட முத்தனம்பட்டி கிராமத்தில் காந்தியடிகளின் 154-வது பிறந்த தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கிராம சபைக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் முரளீதரன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன், ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் லோகி ராஜன் ஆகியோர் சிறப்பு பார்வையாளர்களாக கலந்து கொண்டார்கள். இக்கிராம சபைக்கூடத்தின் மூலம் இக்கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் உள்ளிட்ட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வேளாண்மை மற்றும் உழவர் துறை, ஊரக வளர்ச்சித்துறை, தோட்டக்கலைத்துறை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, சமூக நலத்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம், மகளிர் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் திட்டங்கள் குறித்து திட்ட விளக்கவுரை ஆற்றினார்கள்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் தண்டபாணி, மகளிர் திட்ட அலுவலர் ரூபன்சங்கர் ராஜ் , ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அண்ணதுரை, ஊராட்சி மன்றத்தலைவர் தங்கபாண்டியன், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து திம்மரசநாயக்கனூர் ஊராட்சி சார்பாக பிள்ளைமுகம்பட்டி கிராமத்தில் நடத்தப்பட்ட கிராம சபை கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் அக்ஷயா தலைமையில் நடைபெற்றது. ஆதிதிராவிடர் காலணியில் திருமண மண்டபம் கட்ட வனத்துறையினர் இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது ..டி.சுப்புலாபுரத்தில் ஊராட்சி சார்பாக நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் அழகுமணி தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் ராஜாராம், துணைத் தலைவர் கண்ணதாசன் மற்றும் கார்த்திகேயன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். டி.ராஜகோபாலன்பட்டி ஊராட்சி சார்பாக ஏடி காலனியில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் வேல்மணி தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கவுன்சிலர் ஜி.கே.பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ரெங்கசமுத்திரம் ஊராட்சி சார்பாக ஜம்புலிபுத்தூர் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு ஊராட்சி மன்ற தலைவர் சுப்பிரமணி தலைமையில் நடைபெற்றது. ஊராட்சி செயலர் ஜீவானந்தம் உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர். சண்முகசுந்தராபுரம் ஊராட்சி சார்பாக எஸ்.ரெங்கநாதபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் ரத்தினம் தலைமை தாங்கினார். கன்னியப்பபிள்ளைபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் காளித்தாய் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் உதயபிரகாஷ், ஊராட்சி செயலர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மொட்டனூத்து கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்திற்கு தலைவர் நிஷாந்தி ராஜன் தலைமை தாங்கினார். ஊராட்சி செயலர் விஜயன் உள்ளிட்டோர் கலந்த கொண்டனர். ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் உள்ள பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் கட்ட சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *