• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

பினராயி விஜயன் ஐரோப்பா நாடுகளுக்கு பயணம்..

ByA.Tamilselvan

Oct 1, 2022

தொழில் முதலீடுகளை ஈர்க்க கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம்.
கேரள மாநிலத்திற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையில் மந்திரிகள் மற்றும் தலைமை செயலாளர் உள்பட அதிகாரிகள் குழு இன்று ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்கிறார்கள். இன்றிரவு டெல்லி செல்லும் அவர்கள் அங்கிருந்து முதலில் பின்லாந்து நாட்டிற்கு செல்கிறார்கள். பின்னர் அங்கிருந்து நார்வே உள்ளிட்ட மேலும் பல நாடுகளுக்கு செல்கிறார்கள். 2 வார காலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று அங்குள்ள தொழில் அதிபர்களை சந்தித்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து கொள்கிறார்கள்.