• Tue. Sep 1st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

தமிழகம், புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு ..

Byadmin

Oct 1, 2022

தமிழகம்,புதுவையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
ஆந்திர கடலோரப் பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் லேசான மழை பெய்யும். நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பத்தூர், சேலம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 10 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நாளை (2-ந்தேதி) நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.