• Mon. Aug 31st, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

படித்ததில் பிடித்தது

Byவிஷா

Oct 1, 2022

சிந்தனைத்துளிகள்

எண்ணங்கள்

நமது எண்ணங்களாலேயே நாம் உருவாக்கப்பட்டுள்ளோம். எனவே நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். எண்ணங்கள் தான் ஆற்றல் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதனால் நேர்மறையான எண்ணங்களை படைக்கத் தொடங்குங்கள். 
வாழ்க்கையின் நோக்கத்தைக் கண்டுபிடிக்க உங்கள் ஆற்றலைப் பயன்படுத்துங்கள். உங்கள் பின்னடைவு திருப்பு முனையாக மாறும்.மனதிலிருந்து எதிர்மறை எண்ணங்களை அகற்றிவிடுவது மட்டும் போதுமானதல்ல. அதற்குப் பதிலாக நேர்மறை எண்ணங்களையும் விதைக்க வேண்டும். அப்போதுதான் எதிர்மறை எண்ணங்கள் வராமல் இருப்பதை உறுதிப்படுத்த முடியும். 
நல்ல எண்ணங்களின் வாயிலாக பல்வேறு நன்மைகள் நமக்கு வந்தடைகின்றன. நமது பொருளாதார மேம்பாடு பிரச்சனைகளிலிருந்து விடுபடுதல் நமக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்ளுதல் போன்றவற்றில் எண்ணங்களின் பங்கு மிகவும் அதிகம்.