• Mon. Dec 8th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வேண்டாம்…பீட்டா!!

ByA.Tamilselvan

Sep 29, 2022

அசைவம் சாப்பிடும் ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டாம் என்று பீட்டா அமைப்பு கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள பீட்டா அமைப்பு, மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் செக்ஸ் ஸ்ட்ரைக் செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டது என்றும், மாமிசம் சாப்பிடும் ஆண்கள் 41 சதவீதம் கூடுதல் கார்பனை வெளியிடுகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது. மேலும், நகர்ப்புறத்தில் வாழும் ஆண்கள் ஒரு கையில் பீர் பாட்டில்களுடன், அசை உணவை சாப்பிடுவார்கள். மாமிசத்தை சாப்பிடுவதன் மூலம் தனது பெருமையை மற்றவர்களிடம் காட்டுவதற்கு ஆண்கள் விரும்புகின்றனர்.
இறைச்சி சாப்பிடுவதனால் மிருகங்களை துன்புறுத்துவது மட்டுமல்லாமல் பூமிக்கும் கேடு செய்கின்றனர் என பீட்டா தெரிவித்துள்ளது. ஆண்கள் தங்களது செயல்களுக்கு அவர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும். தற்போது பருவநிலை மாற்ற பிரச்னைகள் அதிகரித்து வருவதற்கு ஆண்கள்தான் முக்கிய காரணம் என்பதை ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எனவே அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தங்களது பிள்ளைகள் ஆரோக்கியமான பூமியில் வாழ விரும்பும் அப்பாக்கள்தான் மாமிசத்தை சாப்பிடாமல் தங்களது வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் பீட்டா கூறியுள்ளது. பீட்டாவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.