• Fri. Jul 10th, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

விருதுநகரில் பயங்கர ஆய்தங்களால் வெட்டி படுகொலை – தொழில் போட்டி காரணமா போலீசார் விசாரணை!..

Byகிஷோர்

Oct 2, 2021

விருதுநகர் ஆத்துமேடு பகுதியில் வசித்து வருபவர் பால்பாண்டி. இவர் அசோகன் லாரி செட் என்ற பெயரில் லாரி சர்வீஸ் நடத்தி வருகிறார். இந்த நிலையில் இன்று விருதுநகர் ரயில்வே பீடர் சாலையில் வந்து கொண்டிருந்த பால்பாண்டியை மர்மக் கும்பல் ஒன்று வழிமறித்து, கையில் இருந்த அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

தகவல் அறிந்து அங்கு வந்த மேற்கு காவல் நிலைய போலிஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து கொலைக்கு தொழில் பகை காரணமா அல்லது கொலைக்கு வேறு ஏதும் காரணமா என விருதுநகர் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.