• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வன்முறையாக மாறிய கேரளா பந்த்… வழக்கு பதிவு செய்த ஐகோர்ட்

ByA.Tamilselvan

Sep 23, 2022

கேரளாவில் நடைபெற்று வரும் பந்த் வன்முறையாக மாறி பேருந்துகள் ,வாகனங்கள் தாக்கப்பட்டதால் உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.
பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிப்பது, பண உதவி செய்தல் மற்றும் பயிற்சி முகாம்களுக்கு ஏற்பாடு செய்தது தொடர்பான புகாரில், நாடு முழுவதும் எஸ்.டி.பி.ஐ மற்றும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பினருக்கு சொந்தமான இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். என்ஐஏ சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். .
இந்நிலையில், என்ஐஏ சோதனைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கேரளாவில் இன்று ஒருநாள் முழு அடைப்பு போராட்டத்திற்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பு அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி மாநிலத்தின் பல்வேறு இடங்களில் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. பல்வேறு இடங்களில் போராட்டம் வன்முறையாக மாறியது. சாலையில் சென்ற பேருந்துகள் மற்றும் வாகனங்கள் மீது கற்கள் வீசி தாக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. . இதையடுத்து கேரள உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து இந்த வன்முறை குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகிறது.