• Mon. Sep 7th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

சோனியா காந்திக்கு அதிகாரம்… தீர்மானம் நிறைவேற்றம்..

Byகாயத்ரி

Sep 20, 2022

இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியினரால், காங்கிரஸ் கட்சியின் அடுத்த தேசிய தலைவரை தேர்வு செய்ய இடைக்கால தலைவர் சோனியா காந்திக்கு அதிகாரம் வழங்கி, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.புதிய மாநில காங்கிரஸ் தலைவர் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி(AICC) உறுப்பினர்களை நியமிக்கவும் சோனியாவுக்கு இந்த தீர்மானம் உதவும் என கூறப்படுகிறது.இந்த தீர்மானம் குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் பிரதீபா சிங் கூறுகையில், “அனைத்து பிரதிநிதிகள் முன்னிலையிலும் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, மேலும் இதற்கான முழு ஆதரவையும் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் வழங்கினோம்” என்று கூறினார்.