• Wed. Nov 19th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

இன்று மாற்றுத் திறனாளிகள் மாநாடு: முதல்வர் பங்கேற்பு

ByA.Tamilselvan

Sep 19, 2022

செங்கல்பட்டில் நடைபெரும் மாற்றுத்திறனாளிகள் மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பேசுகிறார்.
அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்பேர் உரிமைகளுக்கான சங்க த்தின் 4 வது தமிழ் மாநில மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சித் திடலில் (இன்று) திங்களன்று மாலை 4:30 மணிக்கு துவங்குகிறது. இம்மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மாநாட்டு பேருரையாற்றுகிறார் சிறு-குறு தொழில்துறை அமைச்சர் தா.மோ.அன்பர சன், சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மூத்த பத்திரிகையாளர் என்.ராம், சங்கத்தின் மாநில தலைவர் பா.ஜான்சிராணி, அகில இந்திய பொதுச் செயலாளர் வி. முரளிதரன், மாநில செயலாளர் எஸ்.நம்புராஜன், மாநில பொருளாளர் கே.ஆர்.சக்ரவர்த்தி, செங்கல் பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் உள்ளிட்ட பலர் உரையாற்று கின்றனர். மேலும் தொடர்ந்து செப் டம்பர் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மாநிலம் முழு வதும் இருந்து பங்கேற்கும் மாநில பிரதிநிதிகள் மாநாடும் நடைபெற உள்ளது. பிரதிநிதிகள் மாநாட்டை துவக்கிவைத்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசுகிறார்.