• Thu. Jul 23rd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

5 வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யா

ByA.Tamilselvan

Sep 18, 2022

சூர்யா 42 என தற்காலிகமாக பெயரிடப்பட்ட படத்தில் 5 கெட்டப்புகளில் நடிக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.
சூர்யா 42 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். ‘சிறுத்தை’, ‘வீரம்’, ‘விஸ்வாசம்’, ‘அண்ணாத்த’ உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சிவா இயக்கும் படத்தில் சூர்யா தற்போது நடித்து வருகிறார்.சூர்யா 42 இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் சூர்யா இப்படத்தில் 5 கதாபாத்திரங்களில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அண்மையில் வெளியான இப்படத்தின் மோஷன் போஸ்டரில் அரத்தர், வெண்காட்டார், மண்டாங்கர், முக்காட்டர், பெருமணத்தார் என்ற பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இந்த பெயர்கள்தான் சூர்யா நடிக்கும் 5 கதாபாத்திரங்களின் பெயர் என கூறப்படுகிறது. இதனை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருப்பதாக பதிவிட்டு வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு பூஜையுடன் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது.