• Wed. Dec 17th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஆடுகள் வழங்கும் திட்டத்தை கால்நடைத் துறை துவக்குகிறது!..

Byமதி

Oct 1, 2021

கணவனை இழந்து வறுமை நிலையில் உள்ள மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு தலா ஐந்து செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும் என கால்நடை துறை சார்பில் மானிய கோரிக்கையின் போது சட்ட பேரவையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி 75.63 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 38,800 பேருக்கு தலா ஐந்து ஆடுகள் வழங்கபட உள்ளன.

முதற்கட்டமாக 388 பஞ்சாயத்து யூனியனில், ஒரு பஞ்சாயத்து யூனியனுக்கு 100 பெண்கள் என்ற அடிப்படையில் பயனாளிகளை தேர்வு செய்ய உள்ளனர். இந்த பணி அக்டோபர் மற்றும் நவம்பர் ஆகிய இரண்டு மாதத்துக்குள் நடைபெறும். இம்மாதம் 15 தேதிக்குள் இதற்கான பணியை துவக்க கால்நடை துறை தயாராகி உள்ளது.

மேலும் இதற்காக, மாவட்ட வாரியாக ஆட்சியர் தலைமையிலான குழு இந்த பணியை மேற்கொள்ள உள்ளது. அதன் தொடர்ச்சியாக, டிசம்பரில் துவங்கி ஜனவரிக்குள் பயனாளிகள் அனைவருக்கும் ஆடுகள் வழங்க முடிவு செய்து உள்ளதாக, கால்நடை துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.