• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

சூப்பர் ஸ்டார் வீட்டில் மீண்டும் குவா.. குவா.. சத்தம்!!

Byகாயத்ரி

Sep 12, 2022

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவிற்கு கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபரான அஸ்வின் என்பவரோடு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு வேத் (ved) என்ற ஆண் குழந்தையும் உள்ளது. இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் அஸ்வின் சௌந்தர்யா தம்பதியினர் சட்டப்படி விவாகரத்துப் பெற்று பிரிந்துவிட்டனர். குழந்தை சௌந்தர்யாவிடம் வளர்கிறது.

இந்நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு சௌந்தர்யாவிற்கு விசாகன் என்பவரோடு மறுமணம் நடந்தது. இதையடுத்து சௌந்தர்யா கர்பமான நிலையில் இப்போது அவருக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. அந்த குழந்தைக்கு வீர் என்று பெயர் வைத்துள்ளதாக மகிழ்ச்சியோடு தனது ட்விட்டரில் அறிவித்துள்ளார் சௌந்தர்யா. பலரும் அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.