• Wed. Nov 26th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

தமிழகத்தில் நாளை 36-வது மெகா தடுப்பூசி முகாம்

ByA.Tamilselvan

Sep 10, 2022

தமிழகத்தில் நாளை 36 வது கொரோனா மொகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது . இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து தீவிரப்பட்டு வருகிறது. 12 வயது முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் வரை பல்வேறு பிரிவுகளாக பிரித்து தடுப்பூசி செலுத்தப்படுகிறது. இதுவரையில் 35 மெகா சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. சிறப்பு முகாம்கள் மூலம் 5 கோடியே 22 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 36-வது மெகா சிறப்பு முகாம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.
தமிழகம் முழுவதும் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50 ஆயிரம் மெகா தடுப்பூசி முகாம்கள் நடக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற முகாம்கள் மூலம் 12.28 லட்சம் பேர் பயன்அடைந்தனர். நாளை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை சிறப்பு முகாம்கள் நடக்கின்றன. இந்த முகாம்களை இதுவரை தடுப்பூசி போடாமல் இருப்பவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்படுகிறது. பூஸ்டர் தடுப்பூசி வருகிற 30-ந்தேதி வரை இலவசமாக போடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.