• Sun. Dec 14th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பொது பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு இன்று தொடக்கம்…

Byகாயத்ரி

Sep 10, 2022

தமிழ்நாட்டில் 431 பொறியியல் கல்லூரிகளில் சேர சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. நீட் தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமான நிலையில் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது. இந்த சூழலில் பொறியியல் படிப்புகளுக்கு பொது பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. நவம்பர் 13-ஆம் தேதி வரை நான்கு கட்டங்களாக கலந்தாய்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கலந்தாய்வு நடைபெறும் என்றும் கலந்தாய்வில் இடங்களை தேர்வு செய்யும் மாணவர்கள் ஒரு வாரத்திற்குள் கல்வி கட்டணத்தை செலுத்தி கல்லூரிகளில் சேர்ந்து விட வேண்டும் என்று உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இல்லையெனில் அந்த இடம் காலியானதாக கருதப்பட்டு மீண்டும் கலந்தாய்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.