• Wed. Jul 22nd, 2026
WhatsAppImage2026-07-09at2243541
previous arrow
next arrow
Read Now

வரத்து குறைந்தால் தக்காளி விலை உயர்வு..!!!

Byகாயத்ரி

Sep 3, 2022

கனமழை காரணமாக சென்னைக்கு தக்காளி வரத்து குறைந்துள்ள நிலையில் விலை வேகமாக அதிகரித்துள்ளது.

கடந்த சில காலமாக ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் கனமழை பெய்து வருவதால் சென்னைக்குக்கு தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதனால் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வேகமாக உயர்ந்துள்ளது. சில நாட்கள் முன்பு வரை ஒரு கிலோ தக்காளி ரூ.24 முதல் ரூ.28 வரை விற்று வந்த நிலையில் தற்போது கிலோ ரூ.35 முதல் ரூ.40 வரை உயர்ந்துள்ளது. இது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் வாரங்களில் தக்காளி வரத்து அதிகரித்தால் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.