• Wed. Dec 3rd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க அனுமதி..

Byகாயத்ரி

Aug 30, 2022

பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என அறிவிப்பு.

ஆவின் பால் மற்றும் பால் பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்க உணவு பாதுகாப்பு விதிகள் அனுமதிக்கின்றன என உணவு பாதுகாப்பு துறை ஆணையர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தார். தமிழகத்தில் நெகிழி (பிளாஸ்டிக்) தடை உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக் கோரிய வழக்குகளில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பால் பொருட்களை கண்ணாடி பாட்டில்கள், பிளாஸ்டிக் கவர்கள், அலுமினியம் ஃபாயில்களில் அடைத்து விற்க விதிகளில் அனுமதி உள்ளது என்றும் பாட்டில்களை தவிர்க்க ரயில், பேருந்து மற்றும் சுற்றுலா தளங்களில் குடிநீர் வளங்கள் இயந்திரங்களை நிறுவலாம் எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.