• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும்-அமைச்சர் பிடிஆர் பேச்சு…

ByA.Tamilselvan

Aug 29, 2022

தமிழ்நாடு நிதிபற்றாக்குறை இல்லாத மாநிலமாக விரைவில் மாறும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேச்சு.
இந்தியன் வங்கி அதிகாரிகள் சங்கத்தின் வைர விழா கொண்டாட்டம் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் 7-வது மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில், தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்.
இந்த மாநாட்டில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். போதிய அளவு ஊழியர்களை நியமிக்க வேண்டும். பெண் அதிகாரிகளின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாடு முடிந்ததும் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பிடிஆர், “வங்கிகள் தங்களது தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த வேண்டும். இதன்மூலம், வங்கிகள் மேலும் வளர்ச்சி அடையும்.
தமிழ்நாட்டில், 2022 ஏப்ரல் மாதம் முதல் முன் வரையிலான முதல் காலாண்டில் தமிழ்நாட்டின் வரி வருவாய் 52.3% அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு (2021) இதே காலாண்டில் ரூ.22,260 கோடியாக இருந்த வரி வருவாய் இந்த ஆண்டு ரூ.33,923 கோடியாக அதிகரித்தது.இதே நிலை நீடித்தால், அடுத்த 2 ஆண்டுகளில் தமிழ்நாடு நிதி பற்றாக்குறை இல்லாத மாநிலமாக மாறும்” என அவர் தெரிவித்தார்.