
கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள் என்று அமைச்சர் எ.வே.வேலு பேச்சு.
சென்னை துறைமுக சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் சீர்திருத்த திருமணம் நடைபெற்றது. 3 ஜோடிகளுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், இந்த திருமணத்தை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் நடத்தி வைத்தனர்.இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, மந்திரம் என்பது சமஸ்கிருதம் திராவிட திருமணம் என்றால் தமிழ் திருமணம் என விளக்கம் அளித்தார். சமஸ்கிருதம் என்றால் எவருக்கும் புரியாது என தெரிவித்தார். மேலும், நீடு புகழோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று தாய் மொழியான தமிழ் மொழியில் வாழ்த்துகிறோம் என்று வீழ்ந்து தெரிவித்தார். மேலும் கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழைத் தான் விரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்..
