• Sun. Jan 18th, 2026
WhatsAppImage2026-01-15at114305
previous arrow
next arrow
Read Now

வசூல்வேட்டை நடத்தும் கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி…

ByM.maniraj

Aug 27, 2022

கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளி மீது பொற்றோர் குற்றச்சாட்டு. முதன்மை கல்வி அலுவலரிடம் புகார் அளிக்க முடிவு
கழுகுமலை புனித லூயிசா பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். சமீபத்தில் பள்ளியில் sports day நடத்துவதற்காக ஒவ்வொரு மாணவியிடமும் தலா ரூ. 100 வசூல் செய்துள்ளனர். சுமார் ஒரு லட்சத்திற்கும் மேல் வசூல் ஆகியுள்ளது. போட்டிகள் மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து இரவு 7 மணிக்கு முடிந்துள்ளது. இடைப்பட்ட 5 மணி நேரத்தில் போட்டிகளை காண வந்த பெற்றோருக்கு ஒரு காபி கூட கொடுக்கப்பட வில்லை. மாணவிகளுக்கும் ஒன்றும் குடிப்பதற்கு கொடுக்கப்படவில்லை என பெற்றோர்கள் வேதனையுடன் தெரிவித்தனர். பள்ளி நிர்வாகம் மாணவிகளிடம் பணம் வசூலித்து விளையாட்டு போட்டிகள் நடத்தி அதை காண வந்தவர்களுக்கு ஒன்றும் கிடையாது. மாணவிகள் பட்டினி கிடந்ததுதான் மிச்சம். இப்படி அடிக்கடி மாணவிகளிடம் பணம் வசூல் செய்தவாகவும் புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பள்ளி தலைமைஆசிரியர் யாரையும் மதிப்பது கிடையாது. பள்ளிக்கு மாணவியின் பெற்றோர்கள் வந்து தலைமையாசிரியரை சந்தித்தால் அவர்களை உட்கார சொல்வது கூட கிடையாது. இன்னும் நிறைய குறைகள் உள்ளது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் மற்றும் பள்ளியின் தலைமையிடத்தில் விரைவில் புகார் அளிக்கப்படும்.