• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

ஒரே நாளில் 11 இடங்களில் ஏடிஎம் கொள்ளை !

ByA.Tamilselvan

Aug 26, 2022

ஒரே நாளில் 11 இடங்களில் பெரும் ஏடிஎம் கொள்ளை நடந்துள்ளது. எர்ணாகுளத்தில் சவுத் இந்தியன் வங்கியின் 11 ஏடிஎம்களில் இருந்து பணம் திருடப்பட்டுள்ளது. ஏடிஎம்களில் உள்ள சிசிடிவி காட்சிகளில் குற்றவாளியின் முகம் தெளிவாகத் தெரிகிறது. முகத்தை மறைக்காமல் பணத்தை திருடியுள்ளார்.
ஏடிஎம் மையங்களுக்குள் வாடிக்கையாளர்கள் நுழையும் முன், இயந்திரத்தின் பணம் வெளிவரும் பகுதியை டேப் உபயோகித்து மூடிவிடுகிறார். ஏடிஎம்மிற்குள் செல்பவர்கள் பணம் கிடைக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்று விடுகின்றனர். வாடிக்கையாளர்கள் வெளியேறிய உடனே, குற்றவாளி வந்து மூடியிருந்த பகுதியைத் திறந்து பணத்தை எடுத்துக்கொள்வார். இவை அனைத்தும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகி உள்ளது.ஒரேநாளில் 11 இடங்களில் நடந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.