• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

நல்லெண்ண அடிபடையில் 40 கைதிகள் புழல் சிறையிலிருந்து விடுதலை..

Byகாயத்ரி

Aug 26, 2022

முன்னாள் முதல்வர் அண்ணாவின் 113-வது பிறந்தநாள், 75வது ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி புழல் சிறையில் நீண்டகாலமாக இருந்த 40 கைதிகளை நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

அண்ணாவின் 113-வது பிறந்தநாளை முன்னிட்டு, நீண்ட காலம் சிறை தண்டனை அனுபவித்து வரும், கைதிகள் மனிதாபிமான அடிப்படையில் முன்விடுதலை செய்யப்படுவார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதேபோல், 75வது சுதந்திர தினத்தையொட்டி, நீண்டகாலம் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை விதிமுறைக்குட்பட்டு விடுதலை செய்யலாம் என மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது. அதன்படி, தமிழக அரசு ஒப்புதல் வழங்கியதையடுத்து தற்போது 40 கைதிகள் விடுதலையாகினர்.