• Fri. Sep 18th, 2026
WhatsAppImage2026-09-17at2324521
previous arrow
next arrow
Read Now

தொண்டர்கள் முன் கை அசைத்த தேமுதிக தலைவர் விஜயகாந்த்… உற்சாகத்தில் தொண்டர்கள்!

Byகாயத்ரி

Aug 25, 2022

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது பிறந்தநாளான இன்று தேமுதிக தலைமை அலுவலகத்தில், தொண்டர்களை நேரில் சந்தித்துள்ளார்.
தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்த் இன்று தனது 70-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், விஜயகாந்த் அவரது தேமுதிக அலுவலகத்தில், தொண்டர்களை நேரில் சந்தித்து, தனது கைகளை அசைத்து வணக்கம் தெரிவித்தார். இதனை பார்த்த தொண்டர்கள் உற்சாக கூச்சலிட்டனர்.